இக்கோயிலை 'வாமனர் கோயில்' என்று அழைக்கின்றனர். ஒரு தனிகனின் வாழைத் தோட்டத்தில் அவை குலை தள்ளாமலேயே பலமுறை அழிந்துவிட்டது. அந்தத் தனிகன் பொன்னால் ஒரு வாழைக்குலை செய்து அதை இக்கோயில் மூலவருக்கு சமர்ப்பித்தான். உடனே அவனது வாழை குலை தள்ளியதாகவும், அவையே 'நேந்திரம் வாழை' என்று அழைக்கப்படுவதாகவும் ஐதீகம்.
மூலவர் காட்கரையப்பன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் பெருஞ்செல்வநாயகி, வாத்சல்யவல்லி ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். கபில முனிவருக்கு பெருமாள் பிரத்யக்ஷம்.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|